Friday, May 31, 2013

அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.


 அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: - நாம் தமிழர் கட்சி கோரிக்கை
கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
 


கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 14 முஸ்லீம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கர்நாடக காவல் துறையின் பிடியில் உள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர், கோவை கோட்டை மேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல் துறையினர், கைது செய்ய திட்டமிட்டிருந்த இளைஞர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க எந்த பொருளையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர். ஆனால் கர்நாடக காவல்துறை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 600 கிராம் வெடி பொருட்கள் அந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை கோவை மாநகர ஆணையர் மறுத்துள்ளார். சோதனையின் போது சந்தேகிக்கத்தக்க எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று கோவை மாநகர ஆணையர் தெளிவாக அறிக்கையும் கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பீர் முகமதுவுடன் தங்கியிருந்தார் என்று ஒரே காரணத்திற்காக அலியப்பா என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். அவரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளது கர்நாடக காவல் துறை. ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே, கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமலேயே அவரை காவலில் வைத்து விசாரித்துள்ளனர்.  என்னிடம் காவல் துறையினர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லை, எனவே விடுதலை செய்துவிட்டனர்  என்று அலியப்பா பெங்களூருவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கர்நாடகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அலியப்பாவை விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். ஆனால், அவரால் எங்கு எப்படி செல்வது என்று கூட தெரியாமல் திணறியுள்ளார். கர்நாடகத்தில் இயங்கிவரும் மக்களுக்கான மனித உரிமை சங்கம் வழிகாட்டி பாதுகாத்து அழைத்துவந்துள்ளது. இந்த நிகழ்வு அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது.
மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்க முற்பட்ட தேச புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), விட்டுவிட்டு சென்றுவிட்டது! ஆனால் கர்நாடக காவல்துறையினர் இன்னமும் தமிழ்நாட்டுக்குள் வந்த முஸ்லீம் இளைஞர்களை விசாரணைக்காக என்ற பெயரில் கைது செய்து, , நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே சட்டத்திற்குப் புறம்பாக நடத்துகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை ஏதோ குற்றப் பரம்பரையினர் என்று நடத்துவதாகவே இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணையை தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளதே தவிர, அது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக இல்லை.
ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்குரிய சட்ட ரீதியான வழிமுறைகளை கையாளாமல் கைது செய்வதும், அடிப்படை ஆதாரமின்றி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும், குறிப்பிட்ட நபர் சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ளாரே என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமலும் காவல் துறை செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோவையில் ஒரு முறை குண்டு வெடிப்பு நடந்துவிட்டது என்பதற்காகவும், என்றோ நடந்த ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காகவும், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவையிலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்துவரும் முஸ்லீம் இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இப்படிப்ட்ட காவல் துறை அத்துமீறல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்விலிருந்து அந்நியப்படும் ஒரு மன நிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.


Tag:TMMK.MMK.MUSLIM,ISLAM,TAMIL,ARREST,www.tmmkmaduraicity.in

Saturday, March 9, 2013

அல் அய்னில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு



அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 22.02.2013 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து சகோ. இலியாஸ் (மக்காம் கிளை பொருப்பாளர்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தமுமுக பொருளாளர் நாச்சிகுளம் சகோ. டாக்டர் அ. அசாலி அஹ்மது அவர்களின் தலைமையில் மாணவர் ரியாஸ் இலியாஸ் கிராத் ஓதினார். சகோ. டாக்டர் அப்துல் காதிர் (அமீரக துணைச் செயலாளர்) ”பிரார்த்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக சிதம்பரம் அஹமது ஷகீல் அவர்கள் நன்றி கூறினார்கள். சகோ. இலியாஸ் அவர்கள் தேனீர் மற்றும் இரவு உணவிற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் அல் அய்ன் மக்காம் பகுதியில் வசிக்கும் தமிழக சகோதரிகள் தங்களது கணவர், குழந்தைகளுடன் பெருமளவில் கலந்து கொண்டனர்.

source :tmmk.in

Friday, March 8, 2013

இஸ்லாமும் இன்றைய அரசியலும் - தமுமுக பஹ்ரைன் நிகழ்ச்சி



இஸ்லாமும் இன்றைய அரசியலும் - தமுமுக பஹ்ரைன் நிகழ்ச்சி


01:03:2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7.00 மணிக்கு இஸ்லாமும் இன்றைய அரசியலும் என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி.MBA அவர்கள் பஹ்ரைன் மண்டல தமுமுக மர்கஸில் ஆன்லைன் மூலம் சிறப்புறையாற்றினார்கள். இன்நிகழ்சியில் தமுமுக பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ.ராஜகிரி,யூசுப் மற்றும் துனைத்தலைவர் சகோ. நாகை, அப்துர்ரஹ்மான் அவர்கலும் தலமை தாங்கிநார்கள். சகே.டாக்டர்,ஜெஹபர் அலி வரவேர்புறையும், சகோ.மன்னை அலி நன்றியுறையும் வழங்கிநார்கள்.
இன்நிகழ்ச்சியை தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர். இன்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்ப்பற்றோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் இருதியில் அனைவர்க்கும் இரவு உணவு வழ்ஙகப்பட்டது.
.
எல்லா புகலும் இறைவன் ஒருவனுக்கே.

Source :tmmk.in

Wednesday, March 6, 2013

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?





கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.

1.
அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்--டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.

2.
மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்--இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தனஎன்பது சி.பி.. விசாரணையில் தெரிய வந்தது. பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானதுஎன்றும் தெரிய வந்தது.
இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.



3.
அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

4.
செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.
2008
ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாகபுரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.




5.
பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்--டியும் ஜே--எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.

6.
ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

7.
ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.
இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன. நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

8.2002-03
ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்!


 நன்றி :வினவு இணையம்

Tuesday, March 5, 2013

மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!


மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!




ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவுமவிசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!




source:https://www.facebook.com/ThoothuOnline 

Saturday, March 2, 2013

குஜராத் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தும் நரேந்திர மோடி...


குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சிறப்பு விசாரணக் குழுவிடம் கூறியுள்ளதாக எஸ்..டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து சில ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகர்கள் பயணித்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் பலர் பலியாகினர்.

இதையடுத்து குஜராத்தில் முஸ்லிம்கள் கொடூரமாக . படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொடூரமாக பலர் எரித்தும், சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக மாநில உயர் போலீஸ் குழு, சி.பி.., உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஆகியவை விசாரித்தன. இதில், குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி படுகொலை உள்ளிட்ட 10 கலவர வழக்குகளை விசாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்..டி.) அமைத்தது. இந்தக்குழு முதல்வர் மோடியிடம் விசாரணை நடத்தியது.

நரேந்திரமோடி, 2010 மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, எஸ்ஐடி அதிகாரி .கே.மல்கோத்ரா எழுப்பிய 71 கேள்விகளுக்கும், நரேந்திரமோடி பதில் அளித்தார்.

இந்த நிலையில் இம்மாதம் 14-ந்தேதி சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் கசிந்துள்ளன.

மோடி எஸ்..டி விசாரணையின் போது கூறிருப்பதாவது:

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும்.


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன், எனது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் துணை கமிஷனரான (புலனாய்வு) சஞ்சீவ்பட் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில் நடந்தது உயர்மட்டக்குழு கூட்டம் என்பதால், ஜூனியர் அதிகாரியான சஞ்சீவ்பட் அழைக்கப்படவில்லை என்று மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


source:http://tmmk-trichy.blogspot.in